முகவுரை

வேதங்களும் உபநிடதங்களும் வடமொழிச் சொற்றெடர் அமைப்பில்; ”வேதோபநிடதம”; எனப்படும். வேதங்கள் பற்றி வைதிக நெறி என்ற முன்னைய பாடப் பிரிவிலே சுருக்கமாகக் கூறப்பட்டது. வேதங்களை எழுதாக்கிளவி, சுருதி, நிகமம், மறை, அபௌருடேயம் என்னும் பல பெயர்களால் வழங்குவர். வேதங்கள் ஆதியிலே எழுத்தில் வடிக்கப்படவில்லை. செவிவழியாகக் கேட்கப்பட்டே வந்தன. சுருதி என்ற சொல்லின் பொருள் கேட்பதற்கு உரியது என்பது. நிகமம் என்ற சொல் என்றும் அறிவதற்கு உரியதாய் உள்ளது எனப் பொருள்படும். மறை என்பது இரகசியமான உட்பொருள் பல அமைந்தது என்று பொருள்படும். மனிதனால் ஆக்கப்படாதது எனக் குறிப்பதற்கு வேதங்களை அபௌருடேயம் என்ற பெயரால் வழங்கினர்.

வேதத்தின் இறுதியாகவும் சாரமாகவும் முடிந்த முடிவாகவும் விளங்குபவை உபநிடதங்களாகும். இதனால் இவற்றிற்கு வேதாந்தங்கள் எனவும் பெயர் கூறப்படும். வேதங்கள் யாவற்றிற்கும் மறை என்ற பெயர் பொதுவாக வழங்கினாலும் அது உபநிடதங்களுக்கே பெரிதும் பொருந்துவதாகும். ஏனெனில், அவை இரகசியமான பல தத்துவங்களை உள்ளடக்கியுள்ளன.

உபநிடதங்கள்

உப+நி+ஷத் என்னும் மூன்று உறுப்புக்களாலான சொற்றெடரே உபநிடதம் ஆகும். உப ஸ்ரீ நெருக்கமாக நிஸ்ரீ கீழே சத் (ஷத்) ஸ்ரீ அமர்ந்திருத்தல். அதாவது குருவூம் சீடனும் நெருங்கியிருந்து கற்றல் என்பது இதன் பொருள். இவ்வாறு நெருங்கி இருந்து கற்பதற்குப் போதிய கவனம் (சிரத்தை) அவசியமாகும். எனவே சிரத்தையோடு ஆசிரியர் பக்கத்தில் மாணவர் அமர்ந்திருந்து மெய்ப்பொருள் பற்றி ஆராய்ந்து பெற்ற முடிவுகளே உபநிடதங்களின் உள்ளடக்கமாகும். இவை இந்து சமயத்தின் ஞானக் கருவூ+லங்களாக மதித்துப் போற்றப்படுகின்றன. இந்து மதத்தின் எல்லாப் பிரிவுகளும் தமது சிந்தனைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உபநிடதங்களிலிருந்து கடன் பெற்றே உள்ளன.

ஆதிகாலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபநிடதங்கள் இருந்தன. இவை ஆரணியகங்களின் ஓர் உறுப்பாக அவற்றின் இறுதியில் அமைந்திருந்தன.

அதாவது பிராமணங்கள் சங்கிதைகள் ஆகியவை அடங்கின. ஞானகாண்டத்திலே ஆரணியகங்களும் அவற்றின் பிற்பகுதியிலே உபநிடதங்களும் இணைந்தன. இதனால் நான்கு வேதங்களுக்கும் தனித்தனி உபநிடதங்கள் உரியனவாயுள்ளன என்பது தெரிகிறது.

தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த உபநிடதங்கள் பின்னெருகாலத்தில் நூற்றெட்டாகச் சுருங்கின. பின்னா, அவற்றில் பன்னிரண்டு எஞ்சின. அவற்றுள்ளும் இன்று முதன்மை பெற்று விளங்குவன பத்து உபநிடதங்களே. இவற்றிற்குச் சங்கராச்சாரியார் என்ற சமயப் பொரியார் விளக்கவுரை செய்துள்ளார். ஐதரேய உபநிடதம்

உபநிடதங்கள் இந்த உலகம் தோற்றுவதற்கு மூலமாயுள்ள பொருள் எது என்று ஆராய்கின்றன. அதன் இயல்பைப் பல உதாரணங்களால் எடுத்துக் காட்ட முயல்கின்றன. அந்த மூலப்பொருளைப் பிரமம் என்றும் அழைத்து அதனேடு உலகில் உள்ள உயிர்களின் தொடர்பை விளக்குகின்றன. பிரமம் ஆன்மா பிரபஞ்சம் என்பன பற்றி எமது முன்னே சிந்தித்த சிந்தனைகள் யாவும் கதைகளாகவும் உரையாடல்களாகவும் உபதேசங்களாகவும் உபநிடதங்களிலே தரப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது சுவையாகவும் அதேசமயத்தில் விளங்குவதற்கு அரியனவாகவும் உள்ளன. இதனாலேயே உபநிடதங்களுக்கு இரகசியம் என்ற பெயரும் அமைந்தது.

கடோபநிடதத்தில் வரும் நச்சிகேதன் என்ற சிறுவனின் கதை மிகவும் பிரசித்தி பெற்றது. அவனுக்குத் தந்தையான வாஜிசிரவஸ் வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியின் முடிவில் பிராமணர்களுக்குப் பசுக்கள் தானமாக வழங்கப்பட்டன. அப்பசுக்கள் நோய் முதுமை என்பனவற்றால் பீடிக்கப்பட்டிருந்தன. தானம் வழங்கும்போது வழங்குவோன் தன்னிடமுள்ள சிறந்த பொருள்களையே வழங்குதல் வேண்டும. ஆனால் வாஜிசிரவசோ இழிந்தவற்றையே வழங்கினார் . இதனைக் கவனித்திருந்த நச்சிகேதனுக்கு வருத்தம் உண்டாயிற்று. அவன் தன் தந்தையை நோக்கிஇ ”தந்தையே தானத்தில் உமக்கு விருப்பமான மிக உயர்ந்த பொருளையே வழங்குதல் வேண்டும். உமக்கு மிகவும் விருப்பமான பொருளாக நானே உள்ளேன். என்னை யாருக்கு வழங்கப் போகிறீர்? ” என்று கேட்டான். அவன் கேள்வியாலே எரிச்சலுற்ற வாஜிசிரவஸ் ”உன்னை யமனுக்கு அளிப்பேன்” என்றார். அதனை உண்மை என்று கொண்டு தந்தை எவ்வளவோ தடுத்தும் கேளாது நச்சிகேதன் யமனுலகை நோக்கிச் சென்றான். அங்கு மூன்று நாட்கள் காத்திருந்து இறுதியில் யமனைத் தாரிசித்தான்.

யமன் பிராமணச் சிறுவனான அவனை மூன்று நாள் பசி பட்டினியோடு காக்கவைத்த குற்றத்திற்குக் கழுவாயாக மூன்று வரங்களை நச்சிகேதனுக்கு வழங்க முன்வந்தான். நச்சிகேதன் ஒருவரத்தால் தன் தந்தையின் கேள்விப்பயன் அவருக்குக்கிடைத்தல் வேண்டும் என்றும் மறு வரத்தால் அவர்  தமது போபம் ஆறித் தன்னை மீண்டும் ஏற்றல் வேண்டும் என்றும் கேட்டுப்பெற்றான். மூனறாம் வரத்தின் மூலம் ”மரணத்தின் பின் உயிரின் நிலையாது?” என்று விளக்குமாறு வேண்டினான்.

யமன் முதலில் இதற்கு ஒப்பவில்லை. ஞானியராலும் அறிய ஒண்ணாத பரம ரகசியத்தை இச்சிறுவன் எங்கனம் அறிதல் கூடும் என்று அவன் ஐயுற்றான். ஆனால் நச்சிகேதனே அந்த உண்மையையே அறிய வேண்டும் என்று உறுதியாய் நின்றான். யமன் அவனுக்கு ஆசை காட்டிய இன்பங்களில் மனம் செல்லவில்லை. யமன் வேறு வழியின்றி மரணத்தைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் பிரமத்தை அறியும் வழிவகைகள் பற்றியும் மிக விரிவாக நச்சிகேதனுக்கு உபதேசித்தருளினான். ”உடல் ஒரு தேர். மெய்  வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளும் அதிற் பூட்டிய குதிரைகள். மனமே கடிவாளம். இந்தக் கடிவாளத்தைப் பற்றித் தேரை நடத்தும் சாரதியே புத்தி. இந்தத் தேரிலே அமர்ந்திருப்பவனே ஆன்மா. ஆன்மா உள்ளே அமர்ந்திருக்கும் உண்மையை உணர்ந்தவன் ஞானியாவான்”. என்று கடோபநிடதத்திலே கூறப்பட்டுள்ளது. இவை போன்ற பல உவமை களால் உண்மைகளை உபநிடதங்கள்  தெளிவாக விளக்குகின்றன.

உலக வாழ்விற்கு வேண்டிய அறிவுரைகளையும் உபநிடதங்களில் ஆங்காங்குக் காணலாம். தந்தையூம் தாயும் தெய்வமாவர் எனவும் குருவை மகேஸ்வரனாகவே கருதவேண்டும் எனவும் அன்னத்தைப் (உணவை) போற்ற வேண்டும் எனவும உண்மையே வெற்றியை அளிக்கும் எனவும் நல்வினை தீவினையாகிய இரண்டினையும் அடைதற்குரிய செயல்களை நீக்கிப் பற்றுக்களைத்துறப்பதே பரம்பொருளாகிய பிரமத்தை அடைந்து பேரின்பம் அநுபவிக்க உகந்த வழி எனவூம் அவை போதிக்கின்றன.

சமயகுரவர் சந்தானகுரவர் ஆகிய எம் சமய முதல்வர்கள் வேத உபநிடதக் கருத்துக்களையெல்லாம் தமது தோத்திர சாத்திர நூல்களிலே மிகுதியும் கையாண்டுள்ளனர். தேவாரங்களை வேதசாரம் எனவும் திருவாசகத்தை உபநிடதசாரம் எனவும் சைவச்சான்றோர்கள் போற்றுவர். இவற்றின் பெருமையை உணர்ந்த ஐரோப்பியர் இவற்றைத் தத்தம் மொழிகளிலே மொழிபெயர்த்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

 

தீமைகளினின்று என்னை நன்மைக்கு அழைத்துச்செல்

இருளினின்று என்னை ஒளிக்கு அழைத்துச்செல்

சாவினின்று என்னைச் சாகாமைக்கு அழைத்துச்செல்

 

 பிரஹதாரணியக உபநிடதம்

மூலம் : "இந்து சமய பாடம்" கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( சாதாரண ) தரம் - வித்துவான்     க. சொக்கலிங்கம் M. A .