இவ்விரதம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் கழிந்த மறுநாள் ஆரம்பித்து 21வது நாளாகிய சதய நட்சத்திரமும் சட்டித்திதியும் கூடிய நாளில் நிறைவு பெறுவதாகும். இது விநாயக விரதங்களில் மிகச் சிறப்பான விரதமாகும். இந்நாள் தான் விநாயகப் பெருமான் கயமுகாசுரனைச் சம்சாரம் செய்த நாளுமாகும். இதில் காப்புக் கட்டுதல் முக்கிய நிகழ்வாகும். இவ்விரதத்தில் விநாயகர் அகவல், விநாயக புராணம் என்பன படிக்கப்படும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.