சுக்கிரவாரம் என்றால் வெள்ளிகிழமை என்பது பொருள். வெள்ளிக்கிழமை விரதமாவது ஜப்பசி மாதத்து முதலாவது வெள்ளிகிழமை தொடங்கி வெள்ளிகிழமை தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இவ்விரத நாளில் உபவாசமிருந்தால் உத்தமம். அதற்க்கு இயலாதவர்கள் இரவில் பழம் முதலியன உட்கொள்ளலாம். இதற்கும் இயலாதோர் ஒருபொழுது பகலில் உணவு கொள்ளலாம். இவ்விரதம் மூன்று ஆண்டுகளுக்கேனும் அனுட்டித்தல் வேண்டும்.  இவ்விரதத்தை நிறைவு செய்யும்போது, விரதமிருக்குஞ் சாந்திக்கிரிகைகளுடன் முடித்தல் வேண்டும். இக் கிரியை "உத்தியாபனம்" எனக் கூறப்படும்.  விரத பலனை அடையும் பொருட்டுச் செய்யும் கிரியை இதுவாகும்.  ஜப்பசி மாதத்துக் கடைசி வெள்ளிகிழமை உத்தியபனஞ் செய்து கொள்ளுதற்கு உகந்த நாள் ஆகும்.  மேலும் அம்பிகைக்கும்,  விநாயகருக்கும் உரிய நாளாகவும் கொள்ளப்படுகிறது.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.