இவ்விரதம் புரட்டாதி மாத வளர்பிறை அட்டமி அல்லது நவமி அல்லது தசமித் திதியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் (14ம் நாள்) முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்களிக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும்.

உமாதேவியார் சிவ பெருமானை நொக்கி சிவபூசை செய்து அர்த்த நாரீஸ்வரப் பேற்றினைப் பெற்றி விரதமாபையால் இது கேதார கௌரி விரதம் என்று சொல்லப்படுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர்.

மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.


மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.