ஆனி உத்தரம்
- Details
- Super User
- Høytider
- Hits: 1370
நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது. நடராசப்பெருமானுக்கு வருடத்தில் ஆறு விஷேட அபிஷேகங்கள் நடைபெறுவதுண்டு. மானுடவருடம்(மனிதர்க்கு ஒன்று) தேவர்களுக்கு ஒரு நாள்.
ஆறு நேரங்களாவன :
அதிகாலை - மார்கழி (திருஅனந்தல்)
காலைச்சந்தி - மாசி
உச்சிக்காலம் - சித்திரை
சாயூங்காலை(மாலை)- ஆனி
இரண்டாம்காலம் -ஆவணி
அர்த்தசாமம் - புரட்டாதி
எனக்கொண்டு அந்த ஆறுமாதங்களிலாவது ஆறு அபிஷேகம் நடராசப்பெருமானுக்கு நடைபெறும்.தேவர்களுக்கு தினமும் ஆறுநேரஅபிஷேகம் நடைபெறுவதைத்தான் கோயில்களில் ஒரு வருடத்தில்ஆறு மாதங்களில் ஆறு அபிஷேகத்தை நடத்துகிறார்கள்.
ஆனிமாத உத்தரநட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ”ஆனித்திருமஞ்சனம்” என்று அழைப்பர். மார்கழித்திருவாதிரையிலும்;இ சித்திரைத்திருவோணத்திலும்இ ஆனிஉத்தரத்திலும் மாசிஇ ஆவணிஇ புரட்டாதி ஆகிய மாதங்களில் பூர்வபக்க சதுர்த்தசிகளிலும்-அதாவது அமாவாசைக்குப் பின்வரும்14ம் நாளிலும் அபிஷேகம் நடைபெறும். மார்கழித்திருவாதிரை, ஆனிஉத்தரம் ஆகிய காலங்களில் சிதம்பரத்தில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும். ஆனி உத்தரத்துக்கு முதல்நாள் இரதோற்சவம். சிவகாமிஅம்பாள் சமேத ஆனந்தநடராசர் சிற்சபையை விட்டுஎழுந்தருளித்தேரில் உலா வந்து பின் ஆயிரங்கால்மண்டபத்துக்கு எழுந்தருளுவார். இரவூவிஷேட அபிஷேகம் நடைபெறும். உதயத்தில் தரிசனமும் நடைபெற்ற பின்னர் நடராசப்பெருமான் சிற்சபைக்கு எழுந்தருளுவார். இதே போல மார்கழித்திருவாதிரைக்கு முதல் நாளும் தேர்உற்சவம் நடைபெற்றுப்பின்மறுநாள் அபிஷேகம் நடைபெற்று நடராசப்பெருமான் எழுந்தருளும் காட்சி நடைபெறும்.நடராசப்பெருமானின் தரிசனத்தால் விளையூம் ஆனந்தம் பற்றியதிருமந்திரம் பின்வருமாறு.
”புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற் கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள் ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்
இதன் பொருள் புளியைக்கண்டவர்க்கு வாயில் நீர் ஊறுவதுபோல திருக்கூத்துக்கண்டவர்க்கு இதயம் கனியூம். கண்ணீர் துளிக்கும் உடல் சோரும்.
நெஞ்சத்தில் உள்ள இருள் - அஞ்ஞானம் ஒளிக்கும் உள்ளத்தில் ஆனந்த அமுது ஊறும்.
நன்றி
திரு திருமதி முருகானந்தன்