நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது. நடராசப்பெருமானுக்கு வருடத்தில் ஆறு விஷேட அபிஷேகங்கள் நடைபெறுவதுண்டு. மானுடவருடம்(மனிதர்க்கு ஒன்று) தேவர்களுக்கு ஒரு நாள்.
ஆறு நேரங்களாவன :

 

                 அதிகாலை -   மார்கழி (திருஅனந்தல்)
                 காலைச்சந்தி -  மாசி
                 உச்சிக்காலம் -  சித்திரை
                 சாயூங்காலை(மாலை)- ஆனி
                 இரண்டாம்காலம்   -ஆவணி
                 அர்த்தசாமம்    -  புரட்டாதி

இத்தினம் அம்பாள் தரிசனத்திற்குச் சிறந்த நாளாகும். விவாகமாகாத கன்னிப் பெண்கள், இத்தினத்தில் விரதமிருந்து அம்பாள் தரிசனத்தில் ஈடுபடுவதன் மூலம் மாங்கலியப் பாக்கியம் கிடைக்கப் பெறுவர். செவ்வாய் தோஷமுள்ளவர்களும், ஏனையோரும் செவ்வாய்கிழமை விரதத்தை, ஆடிச்செவ்வாயன்று கோவிலில் சங்கற்பம் செய்து ஆரம்பிப்பது உத்தமமானது . ஒரு பொழுது  அன்னமோ, பால், பழமோ உண்டு , இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

 மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்தித் திதி விநாயகர் விரதத்திற்குச் சிறந்த நாளாகும். அந்நாளில் இளம்பிறைச் சந்திரனைப் பார்த்தலாகாது. பகலில் உபவாசம் இருந்து ஆலய தரிசனம் செய்த பின், இரவில் கொழுக் கட்டை, மோதகம் முதலியன விநாயகருக்கு நிவேதித்து உண்ணலாம். அந்நோன்பு நோற்பவர் விநாயகரை அறுகம் புல்லால் அர்ச்சிப்பது அளவிறந்த பலனைக் கொடுக்கும். இத்தினத்தில் விரதம் அனுட்டித்து உள்ளன்போடு வழிபடுவோர்க்கு விநாயகர் திருவருள் கடாட்சம்  கிடைக்கும் என்பது உறுதி.

சங்கடகரசதுர்த்தி.

தேய்பிறையில் வரும் சதுர்த்தியைச் சங்கடகரசதுர்த்தி என அழைத்து விரதமிருப்பர்.


ஆவணிச் சதுர்த்தி (ஆவணி மாதம் வளர்பிறை 4ம் நாள்)

ஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் திருவவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும். ஆவணி மாத  வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச்சமய நூல்கள் சாற்றுகின்றன.

ஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், இத்தினத்தில் நடை பெறும் அபிடேகமும் ஒன்றாகையால், இத்தினம் நடேசர் தரிசனத்திற்கும் சிறந்ததாகும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

இத்தினம் பிதிர்கடன் செய்வதற்கு சிறந்த நாளாகும். தத்தையை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாட்டில் ஈடுபட்டு தானங்கள் செய்வதால் பிரிந்த ஆன்மாக்கள் ஈடேற்றம் அடைகின்றன.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

உலக மாதாவாகிய உமாதேவியார் ருதுவாகிய தினமான இத்தினம் அம்பாள் விரதத்திற்கும், தரிசனத்திற்கும் உகந்த நாளாகும். அம்பாளின் எட்டு வகைச் சித்திகளையும் பெற இந்நாள் வழிபாடு உன்னதமானது.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஷ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன்,அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில்  இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

இக்காலத்தில், வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்தளிக்கப்பட்டன.

செம்மனைச்செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்யமுடியவில்லை.  ஏழை மூதாட்டியார் மற்ரவர்  உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச்  செய்ய என , மூதாட்டியிடம் விடைபெற்று அற்ரங்கரைக்குச் சென்றார்.

கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது, அற்ரங் கரையில் படுத்துறங்கினார். இதை அவதானித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச்  செய்யப் பணித்தனர். அது பலனளிக்காத்து போகவே  கூலியாளுக்கு தண்டனை வழங்கிநர். அத் தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன, பாண்டிய மன்னனும் உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தனன் என சமய நூற்கள் கூறுகின்றன.


இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

எல்லா மாதங்களிலும் ஞாயிறு வருகின்ற போதிலும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதத்திற்கும் வழிபாட்டிற்கும் சிறந்ததாகும். இம்மாதத்தில்  சூரிய பகவான் சிங்கராசியில் பிரவேசிப்பதால் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 200

 

வருடம் பிறந்து முதலாவதாக வரும் பூரணை என்பதோடு எமது தலை விதியை நிர்ணயிக்கும், எமது வாழ் நாள் கணக்குகளை எழுதிப் பேணும் யமதர்மராஜனின் கணக்குப்பிள்ளையாகிய சிதிரகுப்தர் திருவவதாரம் செய்த நாளுமாகும்.

தமது தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் தாயை நினைத்து விரதமனுட்டித்துப் பிரார்த்தனை செய்வதால் அன்னாரின் ஆன்மா சாந்தி பெறுகின்றது. அன்று உப்பைத் தவிர்த்து பசும்பால், தயிர் உண்ணாமல் இருத்தல் சிறப்பு. இதனால் பாவச்சுமை குறையும்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006

ஸ்ரீ நடராசப் பெருமானுக்கு வருடத்தில் செய்யப்படும் ஆறு அபிடேகங்களில், வருடம் பிறந்து முதல் வருகின்றர் அபிடேகம் சித்திரைத் திருவோணத்தில் நிகழ்கின்றபடியால் இத்தினம் வழிபாட்டிற்குரிய முக்கிய தினமாகும்.

அதிகாலை - மார்கழி (திருஅனந்தல்).
காலைச்சந்தி - மாசி.
உச்சிக்காலம் - சித்திரை.
சாயூங்காலை(மாலை) - ஆனி.
இரண்டாம்காலம் - ஆவணி.
அர்த்தசாமம் - புரட்டாதி.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

பொதுவாகச் சனிக்கிழமை சனீஸ்வர வழிபாட்டிற்கான நாளாக இருந்த போதிலும் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அனுட்டிக்கப்படும் விரதமும் வழிபாடும் மேலான பலனைத் தர வல்லனவாகையால் இத்தினம் சனீஸ்வர  வழிபாட்டிற்குச் சிறப்பான நாளாகும். இத்தினத்தில் கறுப்பு எள் போட்டளமாக கட்டி மண்சிட்டியில் வைத்து நல்லெண்ணெய் விட்டு எரித்து வழிபடுவார்கள்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

மகாளய பட்சம் புரட்டாதி அமாவாசையன்று முடிவடையும். மகாளயம் அதற்கு முந்திய பதினைந்து நாட்களுமாகும். இது பிதிர்களை நினைத்து அவர்களுக்குச் செய்யப்படும் தானமாகும். பிதிர்களை நினைத்து மாதந்தோறும் தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலனைக் கொடுப்பதாகும்.

மகா + ளயம் - பிதிர்கள் பூமிக்கு வரும் நாள் இதுவாகும்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

Template by JoomlaShine