ஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், இத்தினத்தில் நடைபெறும் அபிடேகமும் ஒன்றாகும். இத்தினம் நடேசர் தரிசனத்திற்குச் சிறந்த நாளாகும்.

1. அதிகாலை - மார்கழி (திருஅனந்தல்).
2. காலைச்சந்தி - மாசி.
3. உச்சிக்காலம் - சித்திரை.
4. சாயூங்காலை(மாலை) - ஆனி.
5. இரண்டாம்காலம் - ஆவணி.
6. அர்த்தசாமம் - புரட்டாதி.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி முடிய வரும்

ஒன்பது நாளும் கும்பத்திலே பூசைசெய்து தேவியை அனுட்டிக்கும்

விரதமாம். இதில் வரும் அட்டமிக்கு மகா அட்டமி என்றும் நவமிக்கு

மகா நவமி என்றும் பெயர் இதனால் இதை மகாநோன்பு அல்லது

மகர் நோன்பு என்று சொல்லிக் கொண்டாடுவர்.

 

இது தேவி உபாசகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விரதமாகும்.

இந்த ஒன்பது இரவுகளிலும் முதல் மூன்று நாட்களிலும் வீரத்தை வேண்டித்

துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களிலும் செல்வத்தை வேண்டித்

திருமகளையும் இறுதி மூன்று நாட்களும் கல்லியை வேண்டிக்

கலைமகளையும் நினைத்து பூசித்து விரதம் அனுட்டிப்பர்.

 

நோன்பு நோற்பவர்கள் பிரதமையில் எண்ணெய்  முழுக்காடி

நோன்பைத் தோடங்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்போர்

முதல் எட்டுநாளும் ஒருபோது உணவு  உட்கொண்டு ஒன்பதாவது

நாளான மகாநவமியில் உபவாசம் இருத்தல் உத்தமம். இந்நோன்பு

நாட்களில் அபிராமி அந்தாதி குமரகுருபரரின் சகலகலா வல்லிமாலை

போன்ற பாடல்கள் பாராயணம் செய்யத்தக்கன.

 

 

நாள் இராகம் பிரசாதம் பழம் புஷ்பம் பத்திரம்

1. வது

தோடி

வெண்பொங்கல்,

சுண்டல்

வாழை     மல்லிகை வில்வம்
2. வது கல்யாணி      புளியோதரை        மா முல்லை துளசி
3. வது காம்போதி    சக்கரைப் பெங்கல் பலா சம்பங்கி  மரு
4. வது பைரவி கறிச்சாதம், பொரியல் கொய்யா  ஜாதிமல்லிகை கதிர்ப் பச்சை
5. வது பந்துவராளி  தயிர்ச்சாதம் 

மாதுளை 

மாதுளை விபூதிப் பச்சை
6. வது நீலாம்பரி     தேங்காய்ச்சாதம் நாரத்தை  செம்பருத்தி சந்தனை இலை
7. வது பிலகரி  எலுமிச்சம்பழம்  பேரீந்து   தாழம்பூ  தும்பை இலை
8. வது புன்னாக வராளி பாயசம், முறுக்கு திராட்சை ரோஜா பன்னீர் இலை
9. வது  வசந்தா   திரட்டுப் பால்      நாவல் தாமரை

 மருக்கொழுந்து

 

 

 

 

 

 

 

 

 

 

இவ்விரதம் புரட்டாதி மாத வளர்பிறை அட்டமி அல்லது நவமி அல்லது தசமித் திதியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் (14ம் நாள்) முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்களிக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும்.

உமாதேவியார் சிவ பெருமானை நொக்கி சிவபூசை செய்து அர்த்த நாரீஸ்வரப் பேற்றினைப் பெற்றி விரதமாபையால் இது கேதார கௌரி விரதம் என்று சொல்லப்படுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர்.

மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.


மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

சுக்கிரவாரம் என்றால் வெள்ளிகிழமை என்பது பொருள். வெள்ளிக்கிழமை விரதமாவது ஜப்பசி மாதத்து முதலாவது வெள்ளிகிழமை தொடங்கி வெள்ளிகிழமை தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இவ்விரத நாளில் உபவாசமிருந்தால் உத்தமம். அதற்க்கு இயலாதவர்கள் இரவில் பழம் முதலியன உட்கொள்ளலாம். இதற்கும் இயலாதோர் ஒருபொழுது பகலில் உணவு கொள்ளலாம். இவ்விரதம் மூன்று ஆண்டுகளுக்கேனும் அனுட்டித்தல் வேண்டும்.  இவ்விரதத்தை நிறைவு செய்யும்போது, விரதமிருக்குஞ் சாந்திக்கிரிகைகளுடன் முடித்தல் வேண்டும். இக் கிரியை "உத்தியாபனம்" எனக் கூறப்படும்.  விரத பலனை அடையும் பொருட்டுச் செய்யும் கிரியை இதுவாகும்.  ஜப்பசி மாதத்துக் கடைசி வெள்ளிகிழமை உத்தியபனஞ் செய்து கொள்ளுதற்கு உகந்த நாள் ஆகும்.  மேலும் அம்பிகைக்கும்,  விநாயகருக்கும் உரிய நாளாகவும் கொள்ளப்படுகிறது.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

ஜப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதற் சட்டி ஈறாகிய ஆறு நாளும் அனுட்டிக்கும் விரதம் இதுவாகும். ஒவ்வொரு நாளும் காலையில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு, சிறிதளவு நீர்மட்டும் அருந்தி உபவாசம் ஆறு நாளும் இருந்து, ஏழாம்நாள் சிவனடியார்களுடன் பாரணை செய்வது இவ்விரதத்திற்கு நியமமாகும். இதற்கு இயலாதவர் முதலைந்து நாளும் ஒரு பொழுது உண்டு. சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு ஆண்டுகள் அனுட்டித்தல் வேண்டும்.

பிரதமையில் சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப்பொய்கையில் ஆறுருவாக, அதனை உமாதேவியார் எடுக்க ஆறுதிருமுகமும்,  பன்னிரண்டு திருக்கையமுடைய ஓருருவாய் எழுந்தருளிய நாள் இக்கந்த சட்டி நாளாகும். சூரபதுமனை முருகன் சங்காரஞ் செய்த நாளும் இதுவேயம். கந்தபுராண உபதேச காண்டத்தில் இவ்விரதம் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தேவர்கள் இவ்விரதத்தை நோற்றுப் பயன் பெற்றதாகவும் இந்நூல் கூறும்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி 
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் 
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளி னானே.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

முன்னொரு காலத்தில்  தேவர்கள் சிவபிரானை வேண்டித் தவம் செய்து பலவகையான வரங்களைப் பெற்றனர். பின் ஆணவமல மமதையால் இறை வனை மதியாது மயக்குற்றனர்.

அப்பொழுது சிவபிரான் அவர்கள் முன் ஒரு கிழவனாகக் காட்சியளித்து  ஒரு தும்பை ஓர் இடத்தில் நட்டுவிட்டு, இதை யாராவது பிடுங்குங்கள் என்று கூறினார். ஒருவராலும் அதைப்பிடுங்க முடியவில்லை. ஆணவ மமதை அடங்கிக்  கிழவனைப் பார்த்தனர். அப்பொழுது அவர் சோதிவடிவாய் நின்றனர். அன்றைய தினம் கார்த்திகை மாதத்துக், கார்த்திகை நட்சத்திரம் கூடிய  பௌர்ணமி நாளாகும். இத்தினமே விளக்கீடு எனக் கொண்டாடப்படுகிறது.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

இவ்விரதம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் கழிந்த மறுநாள் ஆரம்பித்து 21வது நாளாகிய சதய நட்சத்திரமும் சட்டித்திதியும் கூடிய நாளில் நிறைவு பெறுவதாகும். இது விநாயக விரதங்களில் மிகச் சிறப்பான விரதமாகும். இந்நாள் தான் விநாயகப் பெருமான் கயமுகாசுரனைச் சம்சாரம் செய்த நாளுமாகும். இதில் காப்புக் கட்டுதல் முக்கிய நிகழ்வாகும். இவ்விரதத்தில் விநாயகர் அகவல், விநாயக புராணம் என்பன படிக்கப்படும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

ஜப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியற்புற நேரம் தீபாவளிக் காலமாகும். வீடுவாசல் அக்கம் பக்கம் எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதால் இந்நாளுக்குத் தீபாவளி என்று பெயர் வந்ததாகச் சைவப் பெரியார்  சிவபாத சுந்தரனார் கூறுகிறார். அன்றைய தினம் காலையில் ஸ்நானம் செய்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து புண்ணியச்செயல்கள் செய்யவேண்டும். உபவாச விரதம் அனுட்டித்தல் உத்தமம். இந்த நாள் ஆன்மாக்கள் நரக வழியினின்றும் நீக்கப்படும் நற்பாக்கிய நிலையைக் குறிப்பதாகும். எனவே பாதகத் தொழில்களின்றும்  விலகியிருத்தல் சகலரதும் கடனாகும்.

கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி, மாசந் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்ரமணியக் கடவுளைக் குறித்து நோக்கும் விரதம் கார்த்திகை விரதமாகும்.கிருத்திகை எனவும் இது கூறப்படும்.

கார்த்திகை நட்சத்திரத்திக்கு முதல் நாளாகிய பரணியில், ஆசாரமக இருந்து, ஒருபோது உண்டு, மறு நாள் (கார்த்திகை நாள்) முருகனை முறைப்படி பூசைசெய்து வழிபாடாற்றி, உபவாசமிருந்து, அடுத்த நாளாகிய ரோகிணியில் பாரணை செய்தல் உத்தமம். இது கைகூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ள வேண்டும். இவ் விரதம் பன்னிரண்டு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான் ஆகியோர் இவ்விரதத்தை அனுட்டித்துச் சித்திகள் அடைந்ததாக வரலாறு கூறுகின்றது. (அந்திமான், சந்திமான் இடையேறு வள்ளல்கள்.)

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

சிவ விரதங்களுள்  சோமவார விரதமும் மிக மேலானதாகும். சந்திரனுக்குரிய தினம் திங்கள். எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. கிருதயுகம் தோன்றியதும் சந்திரன் சிவபெருமானின் முடியில் அமரும் பேற்றினைப் பெற்றதும் கார்த்திகை சோமவாரத்திலே தான். எனவே இம்மாதத்து திங்கட்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் பகல் முழுவதும் உபவாசமிருந்து, சிவபெருமானைச் சிந்தித்து வழிபாட்டில் ஈடுபட்டு இரவு மட்டும் ஒரு வேளை உணவு உண்ணல் வேண்டும்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

மாதங்களில் சிறந்தது மார்கழி மாதமாகும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பகவான் கீதோபதேசத்தில் கூறுவதிலிருந்து இதன் மகிமையை அறியலாம். மேலும் மார்கழி தேவர்களுக்கு விடியற்காலம். எனவே இறைவனை நினைத்து திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை ஆகியன பாடுவதற்கு மார்கழி உகந்த மாதமாகும்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை உற்சவ காலங்களாகும். திருவாதிரை  நட்சத்திர தினத்தன்று  திருவெம்பாவை நிறைவு பெறுகின்றது. திருவெம்பாவை நடராஜப் பெருமானுக்கு உரித்தான உற்சவம்.

மேலும் மார்கழியில் நிகழும் விழா இறைவனின் ஐந்தொழில்களில் அனுக்கிரகத்தைக் குறிப்பதாகையால் இவ்விழா எல்லா விழாக்களிலும் சிறப்புடையதாகும். மார்கழி திருவாதிரையில் நடைபெறும் நடேசர் அபிடேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்திரா தரிசனமும் ஆன்ம ஈடேற்றத்துக்கு இன்றியமையாதனவாகும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Template by JoomlaShine