மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்நாளில் அனுட்டிப்பது திருவாதிரை விரதம். இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.

மார்கழித் திங்கள் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புக்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகுந்த சிறப்புடையது. இவ்விரதம் சிதம்பரத்தில்லிருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம். அங்கு ஆருத்திரா தரிசனம் செய்வதற்காக அநேகர் செல்வர். ஆருத்திரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இவ் விரதத்தில் உபவாசம் இருத்தல் மேலாம்.

சங்கரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இவ்விரதமகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்பசிவாசாரியருடைய மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழி பெயர்த்துள்ளார்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

தை மாதம் பூரணையுடன் சேர்ந்து வரும் நட்சத்திர தினம் முருக வழிபாட்டிற்குச் சிறந்த நாளாகும். இத்தினத்தில் பலர் பாற்குடம், காவடி முதலியன எடுத்து முருகனை வழிபடுவார்கள்.

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.


இத்தினத்தில் தான் அபிராமிப்பட்டரின் பிரார்த்தனையின் நிமித்தம் அம்பிகையின் அருளால் பூரணை தினமாகக் காட்சியளித்தடு. இன்நாளில் அபிராமி அந்தாதி படித்து தேவியை வழிபடுவார்கள்.  

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Template by JoomlaShine