திருவிளக்குப்பூசை 05/06/20 (வெள்ளிக்கிழமை)
- Details
- Super User
- Informasjon
- Hits: 921
இந்து சபா அடியார்களுக்கு !
இவ் வருடத்திற்கான வருடாந்த மகோற்சவம் நடைபெறாது என்பதனை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். அதற்கு பதிலாக உற்சவ காலங்களில் எம் பெருமானுக்கு அபிஷேகம் நடை பெறும் என்பதை அறியத்தருவதுடன் எதிர்வரும் 05/06/20 (வெள்ளிக்கிழமை) அன்று திருவிளக்குப்பூசை நடைபெற இருப்பதால் விளக்குப்பூசையில் பங்கு பெற விரும்புவோர் 30/05/2020 ம் திகதிக்கு முன் தமது பெயர்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆனால் நோயை கட்டுப்படுத்தும் முகமாக 30 அங்கத்தவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை நினைவு படுத்த விரும்புகின்றோம். இத் தருணத்தில் தங்களில் முதலில் பதிவு செய்யும் 10 அடியார்களுக்கு மட்டுமே விளக்குப்பூசையில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் என்பதையும் அறியதர விரும்புகின்றோம்.
பதிவுகளுக்கு : வாசுகி : mob 95454141
அன்போடு
நிர்வாகத்தினர்