"கொரோணா வைரஸ்" தொற்று நோய் காரணத்தினால் இவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில் எம் பெருமான் அடியார்களின் வேண்டுதலுக்கு இணங்க அக் காலபகுதிகளில்  எம் பெருமானுக்குஅபிஷேகங்கள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன என்பது தங்களில்  சிலர்  அறிந்திடாத விடயம்.

எம் பெருமானுக்கு மகோற்சவ உற்சவ விழாக்களின் முறையே அதாவது கொடியேற்றம், தேர் , தீர்த்தம் போன்ற நாட்களில் அபிஷேகங்கள் காலை 10.45 மணியளவிலும், ஏனைய நாட்களுக்கான அபிஷேகங்கள் மாலை 17.45 மணியளவிலும் ஆரம்பிக்கும் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகின்றோம்

ஆனால் நாம் அனைவரும் "கொரோணா வைரஸ்"  தொற்று நோய் தற்பாதுகாப்பு சட்ட விதி  முறைகளுக்கு அமைய   நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  விதி முறைகளை மீறும் தருணத்தில் தனி ஒருவர் அபராதமாக  20.000 kr  கட்ட  வேண்டிய நிலை வரும் என்பதும், அதனை செலுத்த தவறும் தருணத்தில்  6 மாத சிறை தண்டனை  என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம் என்பதால் அதனையும் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றோம் .

எம் அடியார்கள் தங்களையும், எம் பெருமான்  அடியார்களையும் , ஆலய குருக்களையும் பாதுகாக்கும் முகமாக விதி முறைகளை பின் பற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் .

வைரஸ் நோயின் சட்டங்களுக்கு அமைய எம்மால் 30 அங்கத்தவர்களுக்கு மேல் ஆலயத்துக்குள் அனுமதிக்க  முடியாத இவ் நிலையில் தங்களில் ஒருவராகவோ  அல்லது இருவராகவோ வந்து வழிபாடு செய்வதன்  மூலம், பல குடும்பங்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வோமாக! 

 

அன்போடு

நிர்வாகத்தினர்