தேவை/ தேடுதல்

பேர்கென் வாழ் இந்து மதம் சார்ந்தவர்களுக்கு !

இரு மொழி கலை, கலாச்சாரங்களுக்கு  இடையே வாழ்ந்து வரும் எமது இளம் சிறார்கள் எப்படி தமது நாளாந்த வாழ்வியலை இருமொழி, கலை , கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து , எமது  சமயத்தையும், எமது சமயத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்,  அதன் வழிபாடுகளையும் தெரிந்து கொண்டு , அவற்றை  பிரதிபலிக்கக்கூடிய ஆளுமை உடைய  சிறார் ஒருவரை   தேடுகின்றோம்.

இவ் ஆளுமைகள் கொண்ட ஒருவரை முன் வைத்து Super NRK « BLI MED HEIM »  என்னும் ஒரு ஆவண தொகுப்பு தயாரிக்க உள்ளனர்.

ஆவண தொகுப்பாளர் [journalist]  தங்களது  சிறாரின் நாளாந்த வாழ்வியலை இல்லம் வரை வந்து தொகுத்து வழங்க உள்ளனர்.. இதில் ஆர்வம் உள்ள ஒருவராகவும்   இந்து  மத   வாழ்வின் அனுபவத்தை பகிர கூடிய திறன்  உள்ளவராகவும்  இருத்தல் வேண்டும்.

இதில் பங்கு பெற விரும்பும் சிறார் 7 வயதில் இருந்து 10 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

நோர்வேயியன்  மொழியை நன்கு தெரிந்தவராகவும் பேச்சு திறன் வல்லவராகவும்  இருத்தல்  நன்று.

பங்கு பெற ஆர்வம் உள்ள சிறார்களின் பெற்றோர் எம்மோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் . இது சார்ந்த மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் .

ராஜினி mob..97548278

 வாசுகி  mob …95454141

 

நிர்வாகத்தினர்