01.01.2021 வெள்ளிக்கிழமை

ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 12:00-மணிக்கு நடைபெறும். 

Antall deltaker økes til 20 personer (kun 2 medlemmer/familie), kun under dagspooja, og det påkreves bruk av munnbind.

Den som ikke bruker munnbind, blir dessverre avvist.

Templet vil være åpent til kl. 15.00.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மதியம் 12:00-மணிக்கு புதுவருட விசேடபூசை நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 

 

02.01.21  சனிக்கிழமை: சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 500,-

 

14.01.2021 வியாழக்கிழமை :தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு பொங்கல்  

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

 

16.01.21 சனிக்கிழமை :சதுர்த்தி விரதம் 

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 500 kr ,-

 

 

22.01.21 வெள்ளிக்கிழமை : கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 500 kr ,-

  

 

28.01.2021.  வியாழக்கிழமை - பூரணை விரதம்,தைப்பூசம்

இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகமும், மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகனும் அம்மனும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

பூரணை விரதம் உபயம் – 400 kr

 தைப்பூச உபயம் – 1000 kr.