13/04/21 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு 11.03 க்குபிலவ”  வருடம் பிறக்கின்றது. அந் நேரத்தில் எம் பெருமானுக்கு பால் அபிஷேகமும் தீபாராதனைகளும் நடை பெறும் என்பதை எம் பெருமான் அடியார்களுக்கு அறியத்தர விரும்புகின்றோம்.

14.04.2021 புதன் கிழமை  - “பிலவ” வருடப்பிறப்பு ,

கார்த்திகை விரதம்.
இன்றைய தினம்  விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை:  முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்: வருடப்பிறப்பு .. நிர்வாகம் / ஆலயம்

உபயம் : கார்த்திகை  ..500 kr ,-

 

குறிப்பு: செவ்வாய்க்கிழமை 13.04.2021 மாலை 12.00 மணி தொடக்கம் இரவு 20.00 மணி வரைக்கும் ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

 

15.04.2021  வியாழக்கிழமை: சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் : சதுர்த்தி விரதம்  500 kr ,-

 

26.04.2021  திங்கட்கிழமை : சித்திராபூரணை விரதம் , சித்திரகுப்த விரதம் பூரணை

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் : பூரணை விரதம் :- kr 500,-

 

26.04.21 சித்திரைக்குப்த விரதம்
இன்று சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

  

29.04.2021 வியாழக்கிழமை:  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 500,-

  

விஷேட தினங்கள் :

21.04.21 புதன் கிழமை:   ஸ்ரீராம நவமி