இந்து சமய பண்ணிசைப்போட்டி– 2020

 

எமது இந்து சிறார்களின் பன்னிருதிருமுறையின் பண்ணிசைத்திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் «மஹாசிவராத்திரி» தினத்தை முன்னிட்டு

பண்ணிசைப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.

 

பேர்கன் இந்துசபையினர் இதற்குரிய ஒழுங்கினைச் செய்துள்ளனர்.

இடம்- Sandgotna skole , 5172 Loddefjord

காலம்- 16.02.2020 - ஞாயிற்றுக்கிழமை மாலை 13: 00 மணி

விண்ணப்ப முடிவுத்திகதி - 14.02.2020

 

போட்டி விதிமுறைகள்

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும்.

 

1. தேவாரம் - பண்ணுடன் பாடவேண்டும்.

 

2. திருவாசகம் - மோகன இராகத்தில் அல்லது விருத்தமாகப் பாடுதல் விரும்பத்தக்கது.

 

3. திருப்புராணம் – மத்தியமாவதி இராகத்தில் அமைந்திருத்தல் நல்லது.

 

4. திருப்புகழ் - விரும்பிய இராகத்தில் பாடலாம். 4 அல்லது 8 வரிகள் கொண்ட சிறிய திருப்புகழாகத் தேர்ந்தெடுக்கவும்.

 

குறிப்பு - சிறார்களை ஊக்குவிக்கும் நோக்குடன் பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் 21.02.2020 அன்று

மாலை 7.30 மணிப்பூஜையின் பின்னர் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தயவுசெய்து பிள்ளைகளை ஊக்குவித்துப் போட்டிகளில் பங்கு கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

அறிவித்தல் - மஹாசிவராத்திரியை முன்னிட்டு அன்று இரவு ஆலயத்தில் நான்கு ஜாமப்பூஜைகள் நடைபெறும். அன்று ஆலயத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பங்குபற்ற விரும்புவோர் 14.02.2020க்கு முன்னர் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு -

திருமதி கமலினி ஜெயதரன்தொலைபேசி இல . 40087774

அனைவரையும் ஆலயத்திற்கு வருகை தந்துஎம்பெருமான் அருள் பெற்றேகுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

(படிவம்இணைக்கப்பட்டுள்ளது.)

 

போட்டிகளுக்கான வயதெல்லை பின்வருமாறு

 

2016, 2015, 2014  

4, 5, 6 வயது மழலை

தேவாரம்

 

2012, 2013

7, 8 -வயது மழலை -1

தேவாரம்

 

2009, 2010, 2011

9, 10, 11- வயது கீழ்ப்பிரிவு

தேவாரம், திருப்புகழ்

 

2006, 2007, 2008

12, 13, 14- வயது மேற்பிரிவு

பஞ்சபுராணம் -- தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,

திருப்பல்லாண்டு, திருப்புராணம்.

 

அதிமேற்பிரிவு வயதெல்லை இல்லை

பஞ்சபுராணம் -- தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,

திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ்.

 

--------------------- இங்கே கிழிக்கவும் ---------------------------

 

 

விண்ணப்ப படிவம்

 

இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2020

விண்ணப்ப முடிவுத்திகதி 14.02.2020

 

இடம் - Sandgotna skole , 5172 Loddefjord

காலம் - 16.02.2020 - ஞாயிற்றுக்கிழமை மாலை 13: 00 மணி

 

முழுப்பெயர்(தமிழ்): ___________________________________________________________


முழுப்பெயர்(ஆங்கிலம்): ______________________________________________________


பிறந்ததிகதி : ______________________


தொலைபேசி இலக்கம்: _______________________

 

------------------------------- -------------------------------

பெற்றோர் கையொப்பம் திகதி

 

 

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் "

 

 

நிர்வாக சபை (பேர்கன் இந்துசபா)

 

-------------------------------------------------------------------