1. கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்

அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் ...... பெருமாளே.

 

2. இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்

இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்

அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.

 

3. உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி

ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்

என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே

தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே

ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

 

 

4. பத்தியால் யானுனைப் ...... பலகாலும்

பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்

முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா

ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா

வித்தகா ஞானசத் ...... திநிபாதா

வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

 

5. அபகார நிந்தைபட் ...... டுழலாதே

அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே

உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே

இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா

திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.

 

6. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி

யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது

ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை

ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி

நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய

நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக

தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம

தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

 

 

7. காமியத் தழுந்தி யிளையாதே

காலர்கைப் படிந்து மடியாதே

ஓமெழுத்தி லன்பு மிகவூறி

ஓவியத்தி லந்த மருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா

ஏரகத் தமர்ந்த பெருமாளே.

 

8. ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே,

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே,

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,

ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்,

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

 

 

9. இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி

இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே

உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி

உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்

வனச குற மகளை வந்தித்து அணைவோனே

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே

கரி முகவன் இளைய கந்த பெருமாளே.

 

 

 

10. அகரமு மாகி யதிபனு மாகி

யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி

அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி

யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ

எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி

மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை

மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி

திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை

மலைமிசை மேவு ...... பெருமாளே.

 

 

11. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்

மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து

மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்

ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட

தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு

நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு

நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற

சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று

சோலைமலை நின்ற ...... பெருமாளே.

 

 

12. தமரு மமரு மனையு மினிய

தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு

தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி

கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை

கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம

குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு

குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு

மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு

மழகு முடைய ...... பெருமாளே.

 

 

13. சந்ததம் பந்தத் ...... தொடராலே

சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்

கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே

சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா

தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

 

 

 

14. பாதி மதிநதி போது மணிசடை

நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்

மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு

வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட

வேலை விடவல பெருமாளே.

 

 

15. முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர … எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

 

 

16. மாலாசை கோப மோயாதெ நாளு

மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத

மாதா பிதாவு ...... மினிநீயே

நாலான வேத நூலாக மாதி

நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்

ஞானோப தேச ...... மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப

பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன

பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக

வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ

வேளே சுரேசர் ...... பெருமாளே.

 

பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர

மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை

தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ......

இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ......

ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ......

கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ......

எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ......

முதுகூகை கோட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ......

பெருமாளே.