1. பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லைதன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே.

 

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

2. மன்னுக தில்லை வளர்கநம் 

பத்தர்கள் வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே 

புகுந்து புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன் 

அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த 

பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.  

 

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

3. மிண்டு மனத்தவர் போமின்கள் 

மெய்யடியார்கள் விரைந்து வம்மின் 

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு

ஆட் செய்மின் குழாம் புகுந்து

அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்

ஆனந்த வெள்ளப் பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

பல்லாண்டு கூறுதுமே.

 

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

4. தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)

இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் 

கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் 

நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் 

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

                  

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

5. குழலொலி யாழொலி கூத்தொலி 

ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று 

விம்மி மிகுதிரு ஆருரின்

மழவிடை யாற்கு வழிவழி யாளாய் 

மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே 

பல்லாண்டு கூறுதுமே.

 

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

6. சொல்லாண் டசுரு திருப்பொருள் 

சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண் டிற்சிறை யும்சில 

தேவர் சிறுநெறி சேராமே

வில்லாண்ட கனகத் திரன் மேரு 

விடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே 

பல்லாண்டு கூறுதுமே.

 

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

7. சீரும் திருவும் பொலியச் 

சிவலோக நாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் 

பெற்றதார் பெறுவார் உலகில்?

ஊரும் உலகும் கழற உளறி 

உமைமண வாளனுக்(கு)ஆம்

பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் 

பல்லாண்டு கூறுதுமே.

 

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை)

8. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி

ஆயிரம் பல்லாண்டு!

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற

மங்கையும் பல்லாண்டு!

வடிவார் சோதி வலத்துறையும் சுட

ராழியும் பல்லாண்டு !

படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச

சன்னியமும் பல்லாண்டே.