பத்தாம் திருமுறை, பதினோராந் திருமுறை

 

திருமூலர் நாயனார் அருளிய திருமந்திரம் (பத்தாம் திருமுறை)

  1. யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

 

திருமூலர் நாயனார் அருளிய திருமந்திரம் (பத்தாம் திருமுறை)

  1. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

 

திருமூலர் நாயனார் அருளிய திருமந்திரம் (பத்தாம் திருமுறை)

  1. சிவசிவ என்கிலர் தீவினையாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவருமாவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே.

 

கபிலதேவ நாயனார் அருளியது (பதினோராந் திருமுறை)

  1. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

 

கபிலதேவ நாயனார் அருளியது (பதினோராந் திருமுறை)

  1. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து.