ஆஞ்ஜநேய நாமாவளி

 

ஜய ஹனுமான்      ஜய ஹனுமான்


மாருதி ராயா           ஜய ஹனுமான்


ஜய ஹனுமான்      ஜய ஹனுமான்


வாயூ குமாரா           ஜய ஹனுமான் 


ஜய ஹனுமான்      ஜய ஹனுமான்


அஞ்சனை புத்ரா      ஜய ஹனுமான் 


ஜய ஹனுமான்      ஜய ஹனுமான்


ஸ்ரீராம தூதா            ஜய ஹனுமான்


ஜய ஹனுமான்      ஜய ஹனுமான் 


மஹானு பாவா      ஜய ஹனுமான் 

 

சரணம் கணேசா                 சரணம் கணேசா
சரணம் கணேசா                 சரணம் கணேசா

சக்தியின் மைந்தா              சரணம் கணேசா
சங்கட நாசனா                     சரணம் கணேசா

சம்பு குமாரா                        சரணம் கணேசா
சண்முகன் சோதரா             சரணம் கணேசா

விக்ன விநாயகா                 சரணம் கணேசா
வேழ முகத்தோனே            சரணம் கணேசா

பார்வதி பாலனே                 சரணம் கணேசா
பக்தர்க்கு அருள்வாய்         சரணம் கணேசா

ஐந்து கரத்தோனே               சரணம் கணேசா
அடியார்க்கு அருள்வாய்     சரணம் கணேசா

பானை வயிற்றோனே        சரணம் கணேசா
பாதம் பணிந்தோம்             சரணம் கணேசா

மூசிக வாகன                       சரணம் கணேசா
முன்னின்று காப்பாய்          சரணம் கணேசா

சரணம் கணேசா                  சரணம் கணேசா
சரணம் கணேசா                  சரணம் கணேசா

 

கலைநிறை கணபதி  சரணம் சரணம்
கஜமுக குணபதி  சரணம் சரணம்

 
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக   சரணம் சரணம்


சிலைமலை யுடையவ  சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ   சரணம் சரணம்


உலைவறு மொருபரை  சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை  சரணம் சரணம்


சரணம் சரணம்   சரணம் சரணம்
சரணம் சரணம்   கஜமுக சரணம்

 

சரணம் சரணம் கணபதியே
 சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
 வந்தே அருள்வாய் கணபதியே


அன்பே சிவமே கணபதியே
 அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
 இன்பச் சோதியே கணபதியே


கண்ணே மணியே கணபதியே
 கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
 பொருளும் தருவாய் கணபதியே


ஆவணித் திங்கள் கணபதியே
 அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
 செல்வம் தருவாய் கணபதியே

 

அன்பருக்கு அருள் புரியும்  ஐங்கர விநாயகன்
ஆறுமுக சோதரனாம்   ஐங்கர விநாயகன்
இன்ப வடிவான எங்கள்  ஐங்கர விநாயகன்
ஈசனுமை பாலகனாம்   ஐங்கர விநாயகன்


உருகுமவர் சிந்தைதன்னில்  ஐங்கர விநாயகன்
ஊன்றி என்றும்வாழ்ந்திடுவான் ஐங்கர விநாயகன்
எங்கிலும் நிறைந்திருப்பாய்  ஐங்கர விநாயகன்
ஏக வடிவான எங்கள்   ஐங்கர விநாயகன்


ஐந்து முகன் மைந்தனான  ஐங்கர விநாயகன்
ஒரு பொருளாய் நின்றருள்வான் ஐங்கர விநாயகன்
ஓங்காரமான எங்கள்   ஐங்கர விநாயகன்
ஓளவைக்கு அருள் புரிந்த  ஐங்கர விநாயகன்


அன்பருக்கு அருள் புரியும்  ஐங்கர விநாயகன்
ஆறுமுக சோதரனாம்   ஐங்கர விநாயகன்
இன்ப வடிவான எங்கள்  ஐங்கர விநாயகன்
ஈசனுமை பாலகனாம்   ஐங்கர விநாயகன்


ஆதிமூல மானவா ஐங்கரா சிவசங்கரா
ஆனைமுகத்தோனே உம்மை அடிவணங்கி நிற்கின்றோம்.

Template by JoomlaShine