அன்பருக்கு அருள் புரியும்  ஐங்கர விநாயகன்
ஆறுமுக சோதரனாம்   ஐங்கர விநாயகன்
இன்ப வடிவான எங்கள்  ஐங்கர விநாயகன்
ஈசனுமை பாலகனாம்   ஐங்கர விநாயகன்


உருகுமவர் சிந்தைதன்னில்  ஐங்கர விநாயகன்
ஊன்றி என்றும்வாழ்ந்திடுவான் ஐங்கர விநாயகன்
எங்கிலும் நிறைந்திருப்பாய்  ஐங்கர விநாயகன்
ஏக வடிவான எங்கள்   ஐங்கர விநாயகன்


ஐந்து முகன் மைந்தனான  ஐங்கர விநாயகன்
ஒரு பொருளாய் நின்றருள்வான் ஐங்கர விநாயகன்
ஓங்காரமான எங்கள்   ஐங்கர விநாயகன்
ஓளவைக்கு அருள் புரிந்த  ஐங்கர விநாயகன்


அன்பருக்கு அருள் புரியும்  ஐங்கர விநாயகன்
ஆறுமுக சோதரனாம்   ஐங்கர விநாயகன்
இன்ப வடிவான எங்கள்  ஐங்கர விநாயகன்
ஈசனுமை பாலகனாம்   ஐங்கர விநாயகன்


ஆதிமூல மானவா ஐங்கரா சிவசங்கரா
ஆனைமுகத்தோனே உம்மை அடிவணங்கி நிற்கின்றோம்.